தொடர் கனமழையால் இந்த மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

0
219

தொடர் கனமழையால் இந்த மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடாது தொடர்மழை பெய்து வருகிறது.திருப்பத்தூரில் நேற்றிரவு முதல் பெய்யும் கனமழையின் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா
விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் கோவை திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி திருச்சி திருப்பத்தூர் திண்டுக்கல் தேனி மதுரை கரூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் கனமான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Previous articleதமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்!
Next articleபோக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள முக்கிய பட்டியல்:! எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்?