தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை:! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
173

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை:! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுத்து சுழற்சி காரணமாக அக்டோபர் 17ஆம் தேதி (இன்று) முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமானது முதல் கனமான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று தமிழகத்தில்,
தேனி திருப்பூர் திண்டுக்கல் நீலகிரி கோவை தென்காசி கன்னியாகுமரி திருப்பத்தூர் விருதுநகர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் கரூர் திருச்சி புதுக்கோட்டை நாமக்கல் ஈரோடு சிவகங்கை மதுரை கடலூர் பெரம்பலூர் அரியலூர் மயிலாடுதுறை நாகை தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கும்,சில இடங்களில் மீதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்,சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என்றும், எனவே மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Previous articleவிரைவில் வருகிறது முகூர்த்த ட்ரேடிங்! முழு விவரம் இதோ!
Next article600 கோடி வருமானத்தை அள்ள நினைக்கும் அரசு:! 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு! பறந்தது உத்தரவு!