தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு

0
125
rain alert tamil nadu
rain alert tamil nadu
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு
இன்று முதல் வரவுள்ள நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்.
மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும் 16 மற்றும்  17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும். இங்கு அதிகபட்சமாக  31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், உசிலம்பட்டி, வெள்ளகோவிலில் 3 செ.மீ மழைபொழிவும். பேரையூர் மற்றும் மதுக்கூரில்1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்த நாட்களில் மீனவர்கள் வழக்கம்போல கடலுக்கு செல்லலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Previous articleதடுப்பூசி செலுத்தாததால் தனது மகனை காண தந்தைக்கு தடை!
Next articleபூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் வெளியீடு! இது ஒமிக்ரானை தடுக்குமா?