வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து கனமழை தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒட்டிய வங்க கடல் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
தலைநகர் சென்னையில் பல வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கினர் சாலைகளிலும், தெருக்களிலும், மழை வெள்ளம் ஆறு போல ஓடியது டெல்டா பகுதிகளில் பயிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டன அதை தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, தென் பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிப்புக்குள்ளானது.
அத்துடன் மழையால் 54 பேர் பலியானார்கள். 9600 குடிசைகளும், 2100 வீடுகளும், சேதமடைந்த இருக்கின்றன ஆகவே உடனடி நிவாரணமாக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 150 கோடியும், முழுமையான நிவாரண தொகையாக 2079 கோடியும், வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதற்கிடையில், முதலமைச்சர் ஸ்டாலின் உடன் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வெள்ள நிலைமை தொடர்பாக கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் சேதங்களை நேரடியாக பார்வையிடுவதற்காக உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைப்பதாகவும், அதன் பின்னர் தாக்கல் செய்யப்படும் அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் நிதி வழங்கப்படும் எனவும், மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த மத்திய குழு நாளைய தினம் காலை சென்னைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ராஜீவ் சர்மா தவிர மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர், வேளாண்மைத்துறை தெரிவு இயக்குனர் விஜய் ராஜ் மோகன், சென்னையில் இருக்கின்ற மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் நீர் ஆணையத்தின் இயக்குனர் ஆர் தங்கமணி, டெல்லியில் இருக்கக்கூடிய மத்திய எரிசக்தி துறை உதவி இயக்குனர் பாவியா பாண்டே, சென்னையில் இருக்கின்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மண்டல அதிகாரி ரணஞ்செய்சிங், மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்புச் செயலாளர் எம்.வி.என் வரப்பிரசாத், உள்ளிட்டோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.
நாளை சென்னைக்கு வரும் இந்த குழுவினர் முதலில் தலைமைச் செயலாளர் இறையன்பு உட்பட அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்கள். அதன் பிறகு ஒரு சில குழுக்களாக பிரிந்து மாநில அரசு அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு திரும்பியவுடன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.