மழை வெள்ள சேதம்! கன்னியாகுமரி மாவட்டத்தை ஆய்வு செய்த முதலமைச்சர்!

Photo of author

By Sakthi

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகின்றது.

வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைந்த காற்றழுத்தம் காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்தது.

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களை அடுத்து தற்சமயம் பெய்து வரும் மழையின் காரணமாக, அதிகமாக பாதிக்கப்பட்டது.

கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை மற்றும் திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றார்.

இதன் அடுத்த கட்டமாக நேற்று 9வது நாளாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தோவாளை இருக்கக் கூடிய பெரிய குளத்தின் கரைகளில் மேற்பட்ட படைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர். அதோடு தோவாளை கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தங்குவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய நிவாரண முகாமில் தங்கி இருக்கும் சுமார் 75 நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி இருக்கிறார்.

மழைக்காலங்களில் உண்டாகும் நோய்களை கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நிவாரண முகாமில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர்.

இதனையடுத்து தோவாளை வட்டம் தேரே காலில் கனமழை பெய்ததால் ஏற்பட்டிருக்கக் கூடிய கால்வாய்களை உடைப்பு மற்றும் சாலை சேதங்கள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு ஆய்வு மாளிகையின் மழை வெள்ளம் காரணமாக, அடித்துச் சொல்ல பட்டு பலியான கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் வழக்கின் காலை சார்ந்த பாஸ்கரனின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் உண்டாக்கிக் கொடுக்கும் பாதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை வேகமாக சீர் செய்திடவும், நோய் தொற்று ஏற்படாதவாறு தூய்மை பணிகளை முன்னெடுத்து சுகாதாரத்தை காத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி, அதோடு இதர அடிப்படை வசதிகளை எந்தவிதமான தடையும் இல்லாமல் வழங்கிடவும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மிக விரைவாக முன்னெடுக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அதோடு மாநகராட்சி பகுதிகளில் வருடம் தோறும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக நிரந்தர தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு மழை காரணமாக, பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய வாழை பயிர் பயிரிடப்பட்டு இருக்கக்கூடிய நிலங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு பயிர் சேத விவரங்கள் தொடர்பாக விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

கடைசியாக கல்குளம் வட்டம் பத்மநாபபுரம் கொத்தனார் கால்வாயில் ஏற்பட்டிருக்கக் கூடிய உடைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவைப் பிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே என் நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டசபை உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், என் தளவாய்சுந்தரம், எம் ஆர் காந்தி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அரவிந்த் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், பங்கேற்றதாக தெரிகிறது.