தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும், மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வரும் 30 மற்றும் 31 உள்ளிட்ட தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு.இந்த நிலையில், இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால், உள்ளிட்ட ஒரு பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் தெளிவாகவும் புறநகர்ப் பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருக்கும் அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்ற 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் வறண்ட வானிலையே இருந்தது மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.