இன்று இந்த மாவட்டங்களில் மழை!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் மிக அதிகமாக உள்ளது. மக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் மே 4ம் தேதி ஆரம்பித்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு பிறகாவது வெயிலின் அளவு குறையக் கூடும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஒரு சில நாட்களாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மழை இருப்பதால் வெயிலின் அளவு சற்று குறைந்துள்ளது.
மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வரும் 30 மற்றும் 1ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.