தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, வேலூர், சேலம் ,ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வி சாலையில் நடக்க உள்ளது. இதனை கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்ர்.
நேற்று சேலம், ஆத்தூர், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் தொண்டர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர் அதிலும் அதிகமாக பெண்கள் கூட்டம் காண முடிகிறது. இந்த பயிலரங்கத்தில் மாநாட்டில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன? புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவிக்கப்பட்ட கட்டளைகள் என்ன என்பது குறித்து கூறப்படுவதே இந்த பயிலரங்கம்.
இதற்கான மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் அக்டோபர் 15,16 நாட்களில் பரவலாக தமிழகம் முழுவதும் மழை பொழிந்தது. இதனால் மாநாடு நடைபெறும் விழுப்புரத்திலும் கனமழை காரணமாக மாநாட்டு வேலைகள் தடைபட்டது. பிறகு மழை முடிந்த பிறகு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மாநாடு குறிப்பிட்ட தேதியில் நடைபெறுமா? என்ற கேள்வி தொண்டர்கள், மற்றும் மாநாட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது.