தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எங்கெல்லாம் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது!!

0
111
#image_title

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எங்கெல்லாம் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது!!

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாகவே தமிழகத்தில் காற்று திசை மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கடந்த வாரங்களில் பகல் நேரத்தில் கடுமையான வெயில் மற்றும் இரவு நேரங்களில்  கனமழை பெய்து வந்தது.

இப்பருவ மாறுபாடு காரணமாக மழைப்பொழிவு சில தினங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் அடுத்த 2 மணி நேரங்களுக்கு கன்னியாகுமரி, தென்காசி,திருநெல்வேலி,தேனி, திண்டுக்கல் கோவை நீலகிரி போன்ற மாவட்டங்களில் லேசான மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெறிவித்துள்ளது.

இதனையடுத்து தமிழக கடலோர பகுதியை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வழிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.எனவே அக்டோபர் 5 வரை தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Previous articleஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கபதக்கம்!! 4ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!!
Next articleஇன்றோடு முடிகிறது ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான ரிசர்வ் வங்கியின் காலக்கெடு முந்துங்கள் மக்களே!!!