வீட்டில் பண மழை கொட்ட.. கடன் பிரச்சனை தீர வெள்ளிக்கிழமை நாளில் விநாயகரை இப்படி வழிபடுங்கள்!!

Photo of author

By Rupa

இன்று பலருக்கு இருக்கும் பெரும் பிரச்சனை பணத் தட்டுப்பாடு.எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர மாட்டேங்குது என்பது பலரின் ஆதங்கமாக இருக்கிறது.லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்க முடியாமல் கடனில் சிக்கி தவிக்கும் நபர்கள் ஏராளம் உள்ளனர்.

கையில் பணம் தங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் வெள்ளிக்கிழமை நாளில் விநாயகரை வழிபட்டு வந்தால் பண வரவு தடையின்றி அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை நாளில் சுக்கிர ஹோரையில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமை நாளில் எழுந்ததும் தலைக்கு குளித்து விடவும்.பிறகு 16 நெய் விளக்குகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அருகில் இருக்கின்ற விநாயகர் கோயிலுக்கு செல்லவும்.அரசமரத்து விநாயகராக இருந்தால் இன்னும் சிறப்பு.

வாங்கி வந்த நெய் விளக்கை விநாயகர் முன் வைத்து தீபம் ஏற்றவும்.பிறகு 108 முறை விநாயகரை சுற்றி வரவும்.அப்படி வலம் வரும் சமையத்தில் “ஓம் லட்சுமி கணபதையே நமஹ” என்ற மந்திரத்தை கூறி 108 முறை வலம் வர வேண்டும்.பிறகு வீட்டிற்கு சென்று பூஜை அறையில் இருக்கின்ற விநாயகர் திருவுருவப் படத்திற்கு முன் அமர்ந்து “ஓம் லட்சுமி கணபதையே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நாளிலும் சுக்கிர ஹோரையில் விநாயகரை வழிபட்டு வந்தால் உழைக்கும் பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்கும்.பணத் தட்டுப்பாடு நீங்கி விநாயகர் அருளால் செல்வ வளம் அதிகரிக்கும்.