மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னை, கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தேனி மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் தேனி,கோவை,நீலகிரி மற்றும் தீண்டுக்கள் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்ப நிலை:
சென்னையை பொறுத்தவரை அதிக பட்ச வெப்பநிலை 37 டிகிரி ஆகவும் குறைந்த பட்ச வெப்ப நிலை 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.மேலும் ஈரோடு, திருட்சி,மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக பட்ச வெப்ப நிலையாக 40 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் அதிக பட்சமாக 6 செ.மீ மழையும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 3 செ.மீ மழையும் பூந்தமல்லியில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் ,மத்திய கிழக்கு
அரபிக்கடல்,குமரிக்கடல், மத்திய மேற்கு வங்க கடல் போன்ற பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.