தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

0
111

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

திருவாரூர்,கடலூர்,கோவை, தஞ்சாவூர்,புதுச்சேரி, நாகப்பட்டினம்,காரைக்கால் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,
சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரியை பொருத்தமட்டில் மாவட்டத்தின் உள்பகுதியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் பெரும்பாலும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,சென்னை வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை மகாராஷ்டிரா, குஜராத்,கோவா போன்ற கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்பதால்,மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleதிடீரென வெளியான பிக்பாஸ் சீசன்4 புரமோ! ஜாலியான ரசிகர்கள்!!
Next articleமாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்