ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது ,என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் இன்றைய தினம் வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை அடுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று அதாவது மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசும்.
கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய கிழக்கு அரவைக்கடல் பகுதிகளில் அதோடு வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். ஆகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.