அதிக அளவில் வட்டி வசூலித்த நிதி நிறுவனம்! ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தொழிலாளி

0
60

அதிக அளவில் வட்டி வசூலித்த நிதி நிறுவனம்! ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தொழிலாளி

 

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம், மகா விஷ்ணு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (45).

 

இவர் அப்பகுதியில் பெயின்டர் பணி செய்து வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி செல்வி (40) மற்றும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

Innilaiy கடந்த 2019 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை செல்வி கடன் பெற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அசல் மற்றும் வட்டியுடன் மாதந்தோறும் ரூ.4,700 தவணைத் தொகையாக அவர் செலுத்தியும் வந்துள்ளார். Innilaiy அவர்கள் கடன் பெற்ற தொகையை விட, அதிகளவில் நிதி நிறுவனம் வட்டியை வசூலித்ததாக தெரிகிறது.

 

இதுதொடர்பாக நிதி நிறுவனத்திற்கு சென்று அந்த தம்பதிகள் முறையிட்டுள்ளனர். அப்போது, ஏற்கனவே ரூ.ஒரு லட்சத்து 70 ஆயிரம் செலுத்திய நிலையில், மேலும் எதற்கு 1 லட்சம் செலுத்த வேண்டுமென நிறுவனத்தில் உள்ளவர்களிடம் கேட்டுள்ளனர்.

 

இதுதொடர்பாக வீட்டில் தம்பதிகள் இருவருக்கிடையே பிரச்சனை எழுந்துள்ளது. இந்த பிரச்சனையால் விரக்தியடைந்த ராஜேஷ்கண்ணன், திருப்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

 

அங்கிருந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் அவரது சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், “எனது சாவுக்கு காரணம், மனைவி கடன் பெற்ற அந்த தனியார் நிதி நிறுவனம் தான்” என குறிப்பிட்டுள்ளார்.

 

இதைத்தொடர்ந்து, சடலத்தை ரயில்வே போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்நிலையில், குமார் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தை தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர், அவிநாசி சாலையில் இதைக் கண்டித்து மறியலிலும் ஈடுபட்டனர்.

 

இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு உதவி ஆணையர் அனில்குமார் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். மேலும் இது குறித்து புகார் அளித்தால் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அங்கு நடந்த சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.