தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்

0
138

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களான கோவை,தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய இரு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களான கோவை,தர்மபுரி,சேலம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

மேலும் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.வெப்ப நிலை அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் முதல் குறைந்த பட்சமாக 81 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகள்கூடும்.

தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 4 இடங்களில் அதிகபட்சமாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.இதன்படி மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி, நாகப்பட்டினத்தில் 101 டிகிரி, திருச்சி, தொண்டியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக மரக்காணம் பகுதியில் 50 மி.மீ
மழை பதிவாகியுள்ளது.மேலும் சேலம் மாவட்டம் மேட்டூா், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 40 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, குப்பநத்தம் ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.

Previous articleஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை பார்க்கிறோம்! 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்.
Next articleகண்டிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள காவல் அதிகாரியே 13வயது சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த அவலம்…மாநில காவல்துறை மன்னிப்பு?