திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் !!தண்ணீருடன் விஷம் கொண்ட உயிரினம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ?..
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விடாது மழை பெய்து வருகிறது.இதைதொடர்ந்து இரவு நேரங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது.நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரிமலை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த கன மழை பெய்தது.
இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.மேலும் பெரிய மற்றும் சிறிய விளம்பர பேனர்கள், மேற்கூரைகள் காற்றில் பறந்ததது.தொடர்ந்து மழை காரணமாக இரவு முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருப்பத்தூர் பகுதியில் அதிகாலை 4 மணி அளவில்தான் மின்சாரம் கொடுக்கப்பட்டது.மேலும் பல்வேறு கிராமங்களில் விடிய விடிய மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் அவ்வூரில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுத் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் பெரும் அவதிப்பட்டனர். பல்வேறு தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. டி.எம்.சி. காலனி, அண்ணா நகர், கலைஞர் நகர், பழனிச்சாமி ரோடு ஆகிய பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் கழிவு நீருடன் கலந்து வீடுகளில் புகுந்தது.
தண்ணீருடன் சேர்ந்து விஷம் கொண்ட உயிரினம் வீட்டில் நுழைகிறது.இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். திருப்பத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பல நூறு ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
ஜோலார்பேட்டை ஏலகிரி ஏரி மற்றும் சந்தைக்கோடியூர் ஏரி நிரம்பியது.பகுதியில் சோமநாயக்கன்பட்டி, வெலக்கல்நத்தம், ஜங்கலாபுரம், ஆத்தூர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.