செல்பி மோகத்தால் காயமடைந்த பிக்பாஸ் நடிகை!

Photo of author

By CineDesk

செல்பி மோகத்தால் காயமடைந்த பிக்பாஸ் நடிகை!

கேமரா செல்போன் அறிமுகமானதில் இருந்து செல்பி என்ற கொடிய நோய் பலரை பிடித்து ஆட்டி வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறைகள் செல்ஃபியால் ஆபத்துக்களை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரு சில நேரம் செல்பியால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரைசா வில்சன் செல்பி காரணமாக காயமடைந்து உள்ளார் என்பதை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

படுத்துக்கொண்டே செல்பி எடுக்கும்போது செல்போன் அவரது வாய் மீது விழுந்ததாகவும், அதனால் உதட்டில் காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ள ரைசா, அந்த காயத்தையும் ஒரு செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ’பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்த ரைசா வில்சன் தற்போது அலைஸ், எப்.ஐ.ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலா இயக்கத்தில் இவர் நடித்த ‘வர்மா’ என்ற திரைப்படம் வெளியாகவில்லை என்பதும் இருப்பினும் இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘ஆதித்ய வர்மா’ படத்தில் ப்ரியா ஆனந்த் நடித்த கேரக்டரில் தான் ‘வர்மா’ படத்தில் ரைசா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/B6Kl52PHDvs/