ராஜா ராணி படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவரா?

Photo of author

By Parthipan K

ஆர்யா, ஜெய் ,நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் என தமிழ் திரையுலகின் பட்டாளமே சேர்ந்து நடித்த படம்தான் ராஜா ராணி.இது 2013ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

மேலும் தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி இயக்குனரான அட்லி முதன்முதலில் இயக்கிய திரைப்படம் ராஜா ராணி ஆகும். முதல் படத்திலேயே ஹிட் கொடுத்ததால் அடுத்த படத்தில் அவர் தளபதி விஜயுடன் இணைந்து படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்தில் கதாநாயகர்களாக ஆர்யா மற்றும் ஜெய் இருவரும் நடித்திருந்தனர். இதில் ஜான் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா நடித்து இருந்தார்.ராஜா ராணி படத்தில் ஜான் என்னும் கேரக்டருக்கு ஆர்யாவிற்கு பதிலாக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் சிவகார்த்திகேயன் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில காரணங்களின் காரணங்களினால் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக தான் ஆர்யா நடித்தார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.