ராஜ ராணியின் முன்னாள் ஹீரோ தற்போது சன்டிவியில்! சஞ்சீவ் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!

Photo of author

By Rupa

ராஜ ராணியின் முன்னாள் ஹீரோ தற்போது சன்டிவியில்! சஞ்சீவ் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!

விஜய் டிவியில் யாரவது ஓர் புதுமுகம் சீரியலின் கதை நாயகனகவோ அல்லது கதையின் கதாநாயகியாகவோ அறிமுகம் ஆனால் உடனே பிரபலமடைந்து விடுவர்.அந்தவகையில் அதிக நாட்கள் ஓடிய சீரியலான ராஜா ராணியின் முதல் பகாத்தின் சஞ்சீவ் தற்போது விஜய் டிவி யாரும் சீரியல் வாய்ப்புகள் தராத காரணத்தினால் தற்போது சன் டிவிக்கு சென்றுள்ளார்.

முதலில் விஜய் டிவியில் ராஜ ராணி என்ற தொடர் வெகு நாட்களாக நடைபெற்று வந்தது.அந்த நாடகம் மக்களிடமும் அதிகளவு வரவேற்ப்பை பெற்றது.அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் இருவரும்ஆரம்மபக்கட்டக்காலத்தில் நிஜ கணவன் மனைவி போலவே அனைவரின் மனதிலும் இடம் பிடித்தனர்.நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.பிறகு திருமணம் செய்து கொண்டனர்.அந்த திருமணம் ஆலியாவின் பெற்றோருக்கு எதிராக நடைபெற்றது.அவ்வாறு திருமணம் செய்த உடன் அவர்களுக்கு அழகான பெண் ககுழந்தை பிறந்தது.

மேலும் சஞ்சீவ் கல்யாணத்திற்கு பிறகு வெகு நாட்களாக காற்றின் மொழி என்ற விஜய் டிவியிலேயே மற்றொரு சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார்.அந்த சீரியலும் முடிவு பெற்ற நிலையில்,அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.அந்த படங்கள் சரியான வண்ணம் ஓடாத நிலையில் மீண்டும் சீரியலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்.இவர் காத்திருந்தும் விஜய் டிவி-யிலிருந்து யாரும் இவரை கூப்பிடவில்லை.அதனையடுத்து சன் டிவியில் தற்போது கயல் என்ற ஓர் நெடுந்தொடர் தயாராகி வருகிறது.

https://www.instagram.com/p/CRTrl7mLHII/?utm_source=ig_web_copy_link

அதில் சஞ்சீவ் முன்னணி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.இந்த அறிவிப்பை சஞ்சீவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.தற்போது இவர் சன் டிவியில் இணைந்துள்ளதால்,எந்த டிஆர்பி எகிற போகிறது என தெரியவில்லை.ஆனால்,ஓர் குடும்பத்திடையே பயங்கராமான போட்டி நிலவ போகிறது என்பது வெட்ட வெளுச்சமாக தற்போது தெரிகிறது.