“சினிமால இதெல்லாம் சகஜம்… அவர விமர்சிக்காதீங்க…” பாடகி ராஜலட்சுமி பெருந்தன்மை!

Photo of author

By Vinoth

“சினிமால இதெல்லாம் சகஜம்… அவர விமர்சிக்காதீங்க…” பாடகி ராஜலட்சுமி பெருந்தன்மை!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடந்தது. வெளிநாட்டுக்கு இசைக் கச்சேரிக்காக சென்றுள்ள இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவர், சூர்யா, கார்த்தி, அதிதி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அன்று படத்தின் டிரைலரும் வெளியானது.

 இந்நிலையில் படத்தில் அதிதி ஷங்கர், யுவனுடன் இணைந்து பாடியுள்ள ‘மதுரவீரன்’ என்ற பாடல் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. கிராமிய இசையோடு இருக்கும் இந்த பாடலை முதலில் பிரபல பாடகியான ராஜலட்சுமிதான் பாடி இருந்தாராம். ஆனால் பின்னர் கவன ஈர்ப்புக்காகவும், நட்சத்திர அந்தஸ்துக்காகவும், அவரது குரலை நீக்கிவிட்டு அதிதியைப் பாடவைத்துள்ளனர்.

இது சம்மந்தமான தகவல் இணையத்தில் பரவியதும், அதிதி ஷங்கருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது ராஜலட்சுமி இதுபற்றி பெருந்தன்மையாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் “சினிமாவுல இதெல்லாம் நடப்பது ரொம்பவும் சகஜம். அதனால் யாரும் இதைப் பற்றி அவரை விமர்சித்து பேச வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.