கொரோனாவை வெல்ல டக்கரான வழியை சொன்ன ராஜபக்சே! வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

Photo of author

By Parthipan K

தற்போது உலகிற்கே தண்ணி காட்டி வருவது கொரோனா நோய்த்தொற்று தான். பல நாடுகளும் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்சே  கொரோனாவை ஒழிப்பதற்காக கூறியிருக்கும் தகவல் வைரலாக பரவி வருகிறது.

அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வினை பல்வேறு தலைவர்கள் காணொளி மூலம் இணைந்து கண்டனர். இதன்போது இலங்கை பிரதமர் மகேந்திர ராஜபக்சே தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவிற்கு எதிராக போராடுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக ராஜபக்சே தனது நன்றியினையும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த காணொளியில் “எமக்கும் எமது பிள்ளைகளுக்கும் மிகவும் சிறந்த உலகை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகளின் சாசனத்திலுள்ள இயலுமை தொடர்பில் எமக்கு நம்பிக்கையுள்ளது.

அத்துடன், மிகவும் சவாலான இந்த காலப்பகுதியில் உலகத் தலைவர்களை ஒரே தளத்திற்குக் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவியாக உள்ளது. ஆகவே, கூட்டு நாடுகள் என்ற வகையில், இந்தப் பொறுப்பு மிகு தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகின்றோம்” என மகிந்த ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.