ராஜாராணி சீசன் 2 வின் லேட்டஸ்ட் அப்டேட்!  குஷியான ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

தமிழ் சின்னத்திரையில் முற்றிலும் புதுமையான தொடர்களை வரிசையாக தன்னுடைய டிஆர்பியை ஏற்றுவதற்காக வழங்கிக்கொண்டிருக்கும் ஒரு சேனல் தான் விஜய் டிவி.

இந்நிலையில் தற்போது வரும் திங்கள் முதல் ராஜா ராணி சீசன்2 ஒளிபரப்பாகும் என்ற தகவலை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் நேயர்களின் நல்ல அபிமானத்தை பெற்றது.

ராஜாராணி சீசன் 1- க்கு கிடைத்த அளப்பரிய வெற்றி இந்த இரண்டாவது சீசன் தொடங்குவதற்கு ஒரு வித்தாக அமைந்தது என்றே கூறலாம். மேலும் இந்த சீரியல் இளைஞர்கள், சிறுசுகள், பெருசுகள் என அனைவரையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராஜா ராணி 2 சீரியலில் நாயகியாக ஆலியா மானசாவும் ஹீரோவாக சித்துவும் நடிக்கிறார்.

சமீபத்தில் நடந்த சித்துவின் பர்த்டே பார்ட்டியில் ஆலியா மானசா, சஞ்சீவ் உடன் சேர்ந்து கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை அறிந்த ராஜா ராணி ரசிகர்கள் சீரியல் ரசிகர்கள் இந்த சீசனை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.