ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு! ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்!! வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?

0
218

ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு! ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்!! வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?

 ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு  மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் மூன்று கோடி வரை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் குற்ற பிரிவில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதி மன்றத்தில் முஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அதை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு நீண்ட நாட்கள் தேடுதலுக்கு பிறகு கடந்த வாரம் கர்நாடக மாநிலத்தில் தமிழக காவல் துறையினர் அவரை செய்தனர். இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு ஒரு மாதம் ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை பார்த்த பிறகு ஜாமீன் வழங்க முடிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க கோரி விசாரணையை ஜனவரி 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Previous articleஎன் மனைவியை பிடிக்கல உன் மனைவியை அனுப்பு! கேரளாவில் பிடிப்பட்ட மனைவி கைமாற்றும் கும்பல்!
Next articleநடிகர் சித்தார்த்தை கழுவி ஊற்றும் ருத்ர தாண்டவம் பட இயக்குனர்! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here