ஒரே நாளில் ரஜினி, தனுஷ் படங்கள் ரிலீசா?

Photo of author

By CineDesk

ஒரே நாளில் ரஜினி, தனுஷ் படங்கள் ரிலீசா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஒன்று ரிலீஸ் ஆகிறது என்றால் தமிழ் திரையுலகில் உள்ள பெரிய நடிகர்களே தங்கள் படத்தை அதே நாளில் ரிலீஸ் செய்ய ரொம்பவே யோசிப்பார்கள். ஆனால் ரஜினியின் குடும்பத்திலேயே உள்ள தனுஷ் தனது படத்தை ரஜினி படம் ரிலீஸாகும் அதே நாளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்பட பொங்கல் விருந்தாக ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. இருப்பினும் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தனுஷ் நடித்து வந்த ‘பட்டாஸ்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 16 என்று அறிவிக்கப்பட்டுள்ளது

https://twitter.com/SathyaJyothi_/status/1205812250377777152

ரஜினியின் ’தர்பார்’ மற்றும் தனுஷின் ‘பட்டாஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரு சில நாட்கள் இடைவெளியில் ரிலீசாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிக்கு எதிராக தனுஷே திரும்பி விட்டாரா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் கோலிவுட் திரையுலகில் இதுகுறித்து கூறிய போது ரஜினியின் ’தர்பார்’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகும் என்றும், அதன் பின்னர் ஆறு நாட்கள் கழித்தே தனுஷின் ‘பட்டாஸ்’ ரிலீசாகும் என்றும், எனவே இரண்டு படங்களுக்கும் எந்தவித போட்டியும் இருக்காது என்றும் தெரிவித்தனர்