ரஜினி, சிறுத்தை சிவா காம்போவில் உருவாகும் படத்தின் தலைப்பு :வெளியான தகவல் ! ரசிகர்கள் குஷி !
ரஜினி தற்போது நடித்து வரும் படத்தின் தலைப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் தர்பார் திரைப்படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் நன்றாக கல்லா கட்டி வருகிறது. இதையடுத்து ரஜினி தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க, ரஜினியின் ஆஸ்தான கதாநாயகிகளான மீனா, குஷ்பு ஆகியோர் அவருடன் பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்கின்றனர். ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் சதீஷ், சூரி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பிரம்மாண்டமாக சன் பிக்ஸர்ஸ் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். சிறுத்தை சிவாவின் செண்ட்டிமெண்ட் படி படத்தின் தலைப்பு ஆங்கில வி எழுத்தில் ஆரம்பித்து எம் மில் முடியும் படி இருக்குமாறு பார்த்துக் கொள்வார். வீரம், வேதாளம், விவேகம், மற்றும் விஸ்வாசம் போன்றவை அதற்கு சான்று.
அதனால் அதேப் போன்ற பெயரைதான் இதற்கும் வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படம் என்பதால் இதற்கு தற்போது அண்ணாத்தே எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த தகவலை இன்னும் படக்குழு உறுதிப் படுத்தவில்லை. அதற்குள்ளாகவே ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் அண்ணாத்தே என்ற ஹேஷ்டேக் உருவாக்கி டிரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.