ஏசியில் உட்கார்ந்து சம்பாரிக்கிறாரு.. வெயில் மழைனு நாங்க தான் கஷ்டப்பட்ரோம்!! இளையராஜாவை தாக்கி பேசிய ரஜினி!!

இசையுலகில் பெரிய ஜாம்பவானாக இளையராஜா இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர் மீது பலரும் அதிருப்தியில் தான் உள்ளனர். நடிகர்களின் கால்ஷீட்டுக்கு பதிலாக இவரை எதிர்பார்த்து காத்திருந்த காலமெல்லாம் உள்ளது. 80-களில் கொடி கட்டி பறந்த இளையராஜா 90-களில் இருக்கும் இடம் கூட தெரியாமல் போனார். இதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் ரகுமான், இவரைத் தாண்டி மக்கள் மனம் கவரும் இசையை கொடுத்தது தான்.

இளையராஜா எப்பொழுதும் கர்வம் என்ற கிரீடத்தை சுமந்து கொண்டு இருப்பதால், அதுவே பலருக்கும் பிடிக்காமல் போனது. இயக்குனரோ அல்லது நடிகரோ அவரை நெருங்கி பேசவே அஞ்சினர். அப்படி ரஜினியின் பல படங்களுக்கு இசையமைத்த இளையராஜா பாட்ஷா படத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு வெளியேறினார். இவர் வெளியேறியதற்கு முக்கிய காரணம் ரஜினி இவரது சம்பளம் குறித்து பேசியது தான். நீங்கள் எப்படி எனது சம்பளத்தை பற்றி பேசலாம் அதற்கு அதிகாரம் யார் கொடுத்தது என்றெல்லாம் ரஜினியை நேருக்கு நேராக சந்தித்து பேசி படத்தில் இருந்து வெளியேறினார்.

இவரையடுத்து தேவா பாட்ஷா படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்ததன் பெயரில் அது வெற்றியடையவும் செய்தது. அதன்பின் ஒருபோதும் ரஜினியின் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. இந்த படத்திற்கு முன்பு தளபதி படத்தின் போதே இளையராஜா மற்றும் ரஜினியிடையே முரண்பட்ட கருத்து வேறுபாடு இருந்துள்ளது. தளபதி படத்தில் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்ட இளையராஜா எதுவும் பேசாமல் எனக்கு வேலை இருக்கிறது நான் போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

அவர் சென்றதும் ரஜினி கோபமடைந்து, அனைவர் முன்னிலையிலும் நாங்களெல்லாம் வெயில் மழை பாராமல் உருண்டு புரண்டு சம்பாதிக்கிறோம். ஆனால் இளையராஜா ஏசியில் இருந்து கொண்டு சம்பாதிக்கிறார் என்று கூறிவிட்டார். தொடர்ந்து இது போல் ஒவ்வொரு படத்திலும் இருவருக்கும் ரீதியான கருத்து வேறுபாடு அதிகரிக்க அது பாட்ஷா படத்தில் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா மற்றும் ரஜினி இருவரும் ஒரே மேடையில் காரசார விவாதம் பகிர்ந்து கொண்டதும் அனைவரும் அறிந்த ஒன்று.