ரஜினியால் எந்த பலனும் இல்லை!! அவரது சகோதரர் கருத்து!!

0
186
Rajini has no benefit!! His brother's comment!!
Rajini has no benefit!! His brother's comment!!

ரஜினியால் எந்த பலனும் இல்லை!! அவரது சகோதரர் கருத்து!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

மேலும், கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவரும் அரசியலுக்கு வருவேன், சிஸ்டம் சரியில்லை என கூறினார். 2017ம் வருடம் புதிய கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருகிறேன் என்றும் கூறினார். பிறகு 2019ம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பார் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில், திடீரென தனது உடல் நிலையை காரணம் காட்டி  அரசியலுக்கு வரவில்லை என அறிவித்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயண ராவ் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியது. ரஜினியின் ஜெயிலர் மற்றும் லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது எனவும் அவர் நீண்ட காலம் நலமாக வாழ வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் இதற்கு பிறகு ரஜினி அரசியலுக்கு வர மாட்டார். அவருக்கும் வயதாகி விட்டது. இனி அவர் அரசியலுக்கு வருவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர் யாருக்கும் அதரவு தெரிவிக்கவும் மாட்டார் என கூறியுள்ளார்.

Previous articleடெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை இளைஞரின் வெறி அரஸ்ட்!!
Next articleமாவீரன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய சிவகார்த்திகேயன்!! வீரமே ஜெயம் வீடியோ இணையத்தில் வைரல்!!