தர்பார்’ இசை வெளியீடு தேதி அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

Photo of author

By CineDesk

தர்பார்’ இசை வெளியீடு தேதி அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

CineDesk

Updated on:

தர்பார்’ இசை வெளியீடு தேதி அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிய ’தர்பார்’ படத்தின் திரைப்பட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இசை வெளியிடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி டிசம்பர் 7ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்

‘தர்பார்’ படத்தில் இடம்பெற்ற ’சும்மா கிழி’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் அனிருத்தின் மற்ற சரவெடி பாடல்களையும் கேட்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். வரும் 7ம் தேதிக்கு பின்னர் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.