கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனருடன் கை கோர்க்கும் ரஜினி! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Photo of author

By Rupa

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனருடன் கை கோர்க்கும் ரஜினி! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

தமிழக திரையுலகில் சூப்பர்ஸ்டார் என்ற அழைக்கப்படுவது ரஜினிகாந்த்.இவரது பல படங்கள் மக்கள் இன்றளவும் பார்த்து ரசித்து வருகின்றனர்.சமீப காலமாக வெளிவரும் ரஜினிகாந்த் படங்கள் நினைக்கும் அளவிற்கு ஹிட் கொடுக்க வில்லை.அவர் கடைசியாக தர்பார் படம் நடித்தார்.அதனையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்,இயக்குனர் சிவா இயக்கிவரும் படம் தான் அண்ணாத்த.

இந்த படத்தில் கதாநாயகனாக ராஜினி நடிக்கிறார்,அதனையடுத்து மீண்டும் இவருடன் நயன்தாரா நடித்துள்ளார்.அதனையடுத்து கீர்த்திசுரேஷ்,குஷ்பூ,சூரி மற்றும் சதீஸ் என பலர் நடித்து வருகின்றனர்.ரஜினி ரசிகர்கள் பலர் இந்த படத்தை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.சில மாதம் முன் கொரோனா பாதிப்பால் தற்காலிகமாக இப்படபிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது.அதனையடுத்து மீண்டும் படபிடிப்பு தொடங்கியது.அதன்பின் ரஜினிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது.

அதனால் அவரது காட்சிகள் மட்டும் எடுக்காமல் இதர காட்சிகள் எடுக்கப்பட்டது.ரஜினியின் உடல்நிலை குணமான நிலையில் மீண்டும் அவரது காட்சிகள் எடுக்கப்பட்டது.தற்போது கொரோனாவின் 2 வது அலை தீவிரமாக பரவி வருகிறது.அண்ணாத்த படத்தின் படபிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.இப்படம்,தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது தொடர்ந்து 3 வாரங்களாக இப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுவென நடைபெற்று வருகிறது.இன்னும் ஓரிரு வாரத்தில் இப்படபிடிப்பு முடிந்துவிடும் என கூறுகின்றனர்.

இந்தப்படம் முடிவடையும் நிலையில் ரஜினியின் அடுத்தப்படம்,சென்றளவு அதிக அளவு வெற்றியடைந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை எடுத்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் அடுத்த படத்தில் இனைவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.இதுகுறித்து தேசிங்கு இயக்குனரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,என் அடுத்தப்படம் குறித்து பரவி வரும் செய்திகள் உண்மையல்ல.நான் விரைவில் என் படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை உங்களிடம் கூறுவேன் என்றார்.உங்கள் அன்புக்கும்,ஆதரவுக்கும் நன்றி என கூறினார்.அதுமட்டுமின்றி அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் எனவும் வலியுறுத்தினார்.