தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகர் என்று கூறும் விக்ரம் அளவிற்கு வளர்ந்து வருபவர் தான் மணிகண்டன். இவரின் ஆரம்ப கட்ட படமான பாய்ஸ், காதல் எப்எம் போன்றவை கை கொடுக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்து நடித்த சிறிய கதாபாத்திரமும் பெரிய பெயர் வாங்கி கொடுத்துள்ளது.
அந்த வரிசையில் ஜெய் பீம் முக்கிய இடம் பிடித்துள்ளது என்று கூறலாம். படத்தின் கதையே இவரை சுற்றியதாக தான் காட்டப்பட்டிருக்கும். இதற்கு அப்படியே எதிராக லவ் ஸ்டோரி படமான குட் நைட் ஆனது ஃபேமிலி என்டர்டைன் மூவியாக அமைந்தது. இதுவும் அவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து லவ்வர் தற்போது ரிலீசான குடும்பஸ்தன் உள்ளிட்டவை வெற்றி படிக்கட்டுகளாக அடுத்தடுத்த அமைந்துள்ளது.
குறிப்பாக குடும்பஸ்தன் படம் நடுத்தர வீட்டில் இளம் ஆண்கள் படும் சூழலை அப்படியே வெளி கொணர்ந்து நடித்திருப்பார். இது பெருமான்மையான இளைஞர்களுடன் வாழ்க்கையை ஒத்துப்போக வைத்துள்ளது. அதனால் இப்படம் குடும்பங்கள் எடுத்தும் கொண்டாடும் அளவிற்கு வெற்றி வாகை சூட்டியுள்ளது என்றே கூறலாம்.
இவர் சமீபத்தில் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதிலும் நான் டாப் ஹீரோக்களின் பல குரல்களை மிமிக்கிரி செய்வேன் இதனால் எனது சொந்த குரல் மிகவும் பாதிக்கும். ஒன்றல்ல இரண்டு நாட்கள் வேறொரு குரலில் பேசுவது போல் தான் இருக்கும் என கூறியுள்ளார். இதனால் மிமிக்ரி செய்வது கடினம் என தெரிவித்திருப்பார்.