Cinema

விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் ரஜினி-கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி!மாஸ்காட்ட உள்ள ராணா!

நடிகர் ரஜினி, கேஎஸ் ரவிக்குமார் இணைந்த மிகப்பெரிய சூப்பர் டூப்பர் வெற்றி படங்களை நமக்குக் கொடுத்திருக்கின்றனர்.மேலும் இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்களிடத்தில் எப்பொழுதுமே மிகப் பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருக்கும்.

கேஎஸ் ரவிக்குமார் சமீபகாலமாக படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. தெலுங்கில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு சில படங்கள் இயக்கியிருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியையே சந்தித்தன.

2014ம் ஆண்டு வெளியான லிங்கா படம் படுதோல்வியை சந்தித்ததால் அதன்பிறகு இருவரும் கூட்டு சேரவில்லை.கோச்சடையான் என்ற படத்தில் வசனத்தை மட்டும் எழுதியிருந்தார் கேஎஸ் ரவிக்குமார்.

இந்த நிலையில் ஆறு மாதத்திற்கு முன்பு ரஜினிகாந்தை ரவிகுமாரை அழைத்து ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட படமான ராணா என்று படத்தின் கதையை மீண்டும் கேட்டதாக அவர் சமீபத்தில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ராணா படம் மிகவும் பிரமாண்ட படம் என்றும் இதில் வித்தியாசமான கதை உள்ளது என்றும் கூறுகின்றனர் சினிமா வட்டாரங்கள்.

 

Leave a Comment