இந்த படத்தின் வாய்ப்பை தவறவிட்ட ரஜினி!! விமர்சனம் செய்யும் ரசிகர்கள்!!
இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் . இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நடிகர்களும் நடித்துள்ளார்கள்.
இந்த படம் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளியிட்டது. இத்திரைப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் இந்தியன் 2 தயாரிப்பதாக கடந்த செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் முதல் படப்பிடிப்பு ஜனவரி 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.
மேலும் பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது இதனால் பாதியில் படப்பிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பு நடைபெறு வந்தது.
இந்த இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பரீத் சிங், பிரியா பவானி சங்கர் போன்ற பிரபல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.மேலும் படம் குறித்து படக்குழு அடிக்கடி அப்டேட்களை வெளியிட்டு வந்தது. இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஆனால் இந்தியன் பட வாய்ப்பு முதலில் நடிகர் ரஜினிகாந்த் இடம் சென்று உள்ளது. அவர் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளிவந்தது விமர்சனத்தை பெற்று வருகிறது.மேலும் சில ரசிகர் ரஜினி ஒரு நல்ல படத்தின் வாய்ப்பை தவறவிட்டுள்ளார் என்று கூறிவருகிறார்.