ரஜினிகாந்த்க்கு சீமான் பதிலடி?

Photo of author

By CineDesk

ரஜினிகாந்த்க்கு சீமான் பதிலடி?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் போராட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர்ரில் குடியுரிமை சட்ட மசோதா சம்மந்தமாக ட்வீட் ஒன்றை செய்து உள்ளார் அதில் எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது என்றும். தேச பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலனுக்காக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டு இருக்கும் வன்முறை எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என அந்த ட்வீட் இல் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டுவிட்டரில் தனது எதிர் கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்?குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!

அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது! என சீமான் தனது ட்வீட்டில் தெரிவித்து உள்ளார்.