துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்; ரஜினி பேச்சும் ! அதன் எதிர்வினைகளும் !

Photo of author

By Parthipan K

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்;  ரஜினி பேச்சும் ! அதன் எதிர்வினைகளும் !

துக்ளக் பொன்விழா ஆண்டில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சு சில சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.

மறைந்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் தொடங்கிய துக்ளக் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. அதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  விழாவில் மோடியின் வாழ்த்துரை வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பியுள்ளார்.

விழாவில் பேசிய ரஜினிகாந்த் ’சோ வாசகர் வட்டத்தை உருவாக்க வில்லை அவர் ஒரு இனத்தை உருவாக்கினார்.  ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லலாம். சோவை வளர்த்துவிட்டது இருவர்தான். ஒருவர் பக்தவச்சலம் மற்றொருவர் கலைஞர். கலைஞர் துக்ளக்குக்கு இலவச விளம்பரம் செய்வதாகவே என்னிடம் சோ  கூறியிருக்கிறார்.  சோ போன்ற பத்திரிகையாளர்கள் இப்போது மிக மிக அவசியமாக தேவைப்படுகின்றன.  சமுதாயமும் அரசியலும் இப்போது கெட்டு விட்டது.  பாலில் தண்ணீர் கலந்து போல செய்திகளை திரிக்காமல் உண்மையான செய்திகளை பத்திரிக்கையாளர்கள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.’ எனக் கூறினார்.

துக்ளக் மற்றும் முரசொலி ஆகிய பத்திரிகைகளை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது சமூகவலைதளங்களில் விவாதங்களை எழுப்பியுள்ளது இதனை திமுக காரர்கள் வலுவாக எதிர்த்துள்ளனர் ரஜினியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தனது ட்விட்டரில்’ முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்’ எனக் கூறி ரஜினியை கலாய்த்துள்ளார்.

சமீபகாலமாக ரஜினி மேடைகளில் நல்லது பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் எது பேசினாலும் அது இதுபோல விமர்சனங்களை எழுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.