பாஜக,அதிமுக முத்திரையை தந்திரமாக உடைத்த ரஜினி:

0
120

பாஜக,அதிமுக முத்திரையை தந்திரமாக உடைத்த ரஜினி:

ரஜினி தான் என்று அரசியலுக்கு வருவதாக கூறினாரோ அன்றில் இருந்து அவரை பாஜகவின் ஆதரவாளர் என்றும், அதிமுகவுக்கு அவர் ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டு வந்தன. தனக்கு பின்னால் பாஜகவும் இல்லை வேறு எந்த கட்சியும் இல்லை என்றும், தான் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி கூறியும் யாரும் அதனை நம்ப வில்லை. மீண்டும் மீண்டும் அவர் பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாக அரசியல்வாதிகள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இரண்டே இரண்டு பேட்டிகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது பாஜக மற்றும் அதிமுகவினர் ரஜினியை திட்டும் அளவுக்கு ரஜினி கொண்டு வந்துவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் மீதும் திருவள்ளுவர் மீதும் காவி சாயம் பூச முடியாது என்று ரஜினி கூறியதை பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதிலிருந்து அவர் பாஜகவில் பின்னால் இல்லை என்பது உறுதியாயிற்று

இதனை அடுத்து தற்போது அவர் அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி குறித்து பேசியதை அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த இரண்டே இரண்டு பேட்டிகளில் தன் மீது இருந்த பாஜக மற்றும் அதிமுக முத்திரையை அவர்கள் மூலமே நீக்கிவிட்டார். இனி யாரும் ரஜினியை பாஜகவின் பிம்பம் என்றும் அதிமுகவின் ஆதரவாளர் என்றும் பேச மாட்டார்கள். ரஜினியின் இந்த தந்திரத்தை அரசியல் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்

Previous articleவிமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை
Next articleபொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ்