துண்டுடன் இருந்த ரஜினி.. தனது வேட்டியை கொடுத்த விஜயகாந்த்..

0
239
Rajini who was with a towel.. Vijayakanth who gave his vedi..
Rajini who was with a towel.. Vijayakanth who gave his vedi..

விஜயகாந்த் : இவர் 150க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்களை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர். தமிழ் மீது பற்று கொண்டவர். இவருடைய, தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை “மன்னிப்பு” என்ற டயலொக் தமிழ் மக்களிடத்தில் ரொம்ப பிரபலம். “தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என்ற கட்சியை ஆரம்பித்து, தமிழ்நாடு அரசின் “எதிர்க்கட்சித் தலைவராக” இருந்தவர்.

ரஜினிகாந்த் : “ரஜினி” அவர்கள் எளிமையின் மரு உருவம் என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய இயல்பான நடத்தையால் புகழப்படுபவர். திரைத்துறையின் “சூப்பர் ஸ்டாராக” ஜொலிக்கிறார். இவர் நடிப்பில் சென்ற மாதம் வெளியான, “வேட்டையன்” படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது இவர் தனது “171 வது” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் “கலாநிதி மாறன்” அவர்கள் தயாரிப்பில், “கைதி, விக்ரம்” போன்ற படங்களை இயக்கிய, பிரபல இயக்குனர் “லோகேஷ் கனகராஜ்” அவர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்திற்கு படக்குழு “கூலி” என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் “ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த்” அவர்களை பற்றிய சுவாரசியமான விஷயம் தெரியவந்துள்ளது. விஜயகாந்த் அவர்கள் “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும்” பதவியேற்றபோது, நடிகர் சங்கம் நஷ்டத்திலும், கடனிலும் இருந்தது. இதை சரிசெய்ய வேண்டும் என்பதற்காக, “மலேசிய மற்றும் சிங்கப்பூர்” போன்ற நாடுகளில் “நட்சத்திர கலை விழா” நடத்த ஏற்பாடு செய்து நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். “மலேசிய கலை நிகழ்ச்சியை” முடித்துவிட்டு அனைவரும் “பேருந்தில்” செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சில நடிகர்கள் பேருந்தில் என்ற மறுக்க, இதை கேள்விப்பட்ட “ரஜினி பேருந்தில் முதல் ஆளாக ஏறி” அமர்ந்து விட்டாராம். வர விருப்பம் இல்லை என்று சொன்னவர்களிடம் நான் கூப்பிட்டேன் என்று சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதை கண்டு ரஜினி அவர்களே பேருந்தில் ஏறி விட்டார், இனி வேறு வழியில்லை என்று அனைவரும் பேருந்தில் ஏறி சென்றுள்ளனர்.

துண்டுடன் இருந்த ரஜினிகாந்த்: பேருந்தில் இருந்து இறங்கிய ரஜினி அவர்கள் சிங்கப்பூர் வந்து “ஸ்டார் ஹோட்டலில்” தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த ரூமுக்கு சென்றிருக்கிறார். பின் ஒருவர் ஹோட்டலில் “துண்டுடன்” அங்கும் இங்கும் அலைவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் பார்த்திருக்கிறார். அருகில் சென்று பார்த்தால் அது ரஜினிகாந்த் தாம்.

அதிர்ச்சியடைந்த அவர், என்ன ஆச்சு என்று கேட்க, தன்னுடைய தனித்துவமான சிரிப்புடன், பேருந்தில் மாரி,மாரி பயணத்ததில் என்னுடைய லக்கேஜ் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூற, இருங்க சார் நான் கொண்டு வருகிறேன் என்று சொல்ல, வேண்டாம் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம், களைப்பில் இருப்பார்கள் என்று சொல்லி இருக்கிறார், பின் அவர், நான் விஜயகாந்த் அவர்களிடம் “வெட்டி சட்டை” கேட்டுள்ளேன். அது போதும் என்று சொல்லியிருக்கிறார். பின் விஜயகாந்த் அவர்கள் கொடுத்த வேட்டி சட்டையுடன் தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம் . இதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Previous articleஎஸ்.பி .வேலுமணி கொடுத்த கிரீன் சிக்னல்!! பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவப் போகும் முக்கிய புள்ளி!!
Next articleஎக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் ரஜினியின் பிறந்தநாள் பரிசு!!