Modi : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பகட்ட காலத்திலிருந்தே மோடிக்கு ஆதரவு அளித்து வருவதுண்டு. அந்த வகையில் தற்போது பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலால் இந்தியா பெரும் கொந்தளிப்பில் உள்ளது. கிட்டத்தட்ட 26 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலால் காஷ்மீர் முழுவதும் சற்று பரபரப்பாகவே உள்ளது. சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பிரதமர் மோடியும் இது ரீதியாக ஆலோசனை நடத்தி வருவதோடு கட்டாயம் காஷ்மீரில் அமைதி நிலையை கொண்டு வருவேன் என உறுதி அளித்துள்ளார். வரும் நாட்களில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இருவருக்குமிடையே கட்டாயம் பெரும் போர் உண்டாகும் என கூறுகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் பேசியபோது, பிரதமர் மோடி மிகப்பெரிய போராளி, பஹலகாமில் நடைபெற்றது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.
இதில் எதிர்கொண்டு வரும் எந்த சவால்களையும் பிரதமர் சமாளிக்க கூடிய வல்லவர். குறிப்பாக காஷ்மீர் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் லாவகமாக கையாள கூடியவர். கட்டாயம் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார் என்று தெரிவித்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் இருந்து மோடிக்கு ஆதரவு அளிக்கும் ரஜினி இந்த தீவிரவாத தாக்குதலிலும் அவரைப் புகழ்ந்து பேசி உள்ளார். வரும் தேர்தலில் அவருக்கு சப்போர்ட் செய்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.