திடீரென்று பின்வாங்கிய ரஜினிகாந்த் சோகத்தில் ரசிகர்கள்! மகிழ்ச்சியில் திமுக!

Photo of author

By Sakthi

தன்னுடைய உடல் நிலை காரணமாக தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அதிலே குறைவான காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யும்போது, உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்னுடன் அரசியல் பயணம் மேற்கொள்பவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களையும் அவர்கள் சந்திக்கலாம் என்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை.

நான் தந்த வாக்கை மறுக்க மாட்டேன் நான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்து இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தால், 4 பேர் நான்கு விதமாக என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் உடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர இயலவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை தங்களிடம் தெரிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலியானது எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தில் இருக்கும் நான் கட்சி தொடங்குவேன் என்று எதிர்பார்த்த என்னுடைய ரசிகர்களுக்கும், மக்களுக்கும்,ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்னை மன்னித்துவிடுங்கள். சென்ற நவம்பர் மாதம் 30ஆம் தேதி உங்களை சந்தித்தபோது, ஒருமனதாக உங்கள் உடல்நலம் தான் எங்களுக்கு முக்கியம் நீங்கள் என்ன முடிவை அறிவித்தாலும் எங்களுக்கு சம்மதம் என்று தெரிவித்த வார்த்தைகளை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். ரஜினி மக்கள் மன்றம் எப்பவும் போல செயல்படும் என்று குறிப்பிடுகின்றார்.

மூன்று வருடங்களாக எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் உங்கள் உடல்நலனை கவனியுங்கள் என்று தெரிவித்த தமிழருவிமணியன் அவர்களுக்கும், மனமார்ந்த நன்றி நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என்னுடன் வந்து பணியாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்த மரியாதைக்குரிய அர்ஜுனன் மூர்த்தி அவர்களுக்கும், என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய இயலுமோ அதை நிச்சயமாக செய்வேன். என்னை வாழ வைக்கும் தெய்வம் என்னுடைய ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்திருக்கின்றார்.