திடீர் கரிசனம் ரஜினிகாந்த் மீது அமைச்சர்கள் வைத்த நம்பிக்கை!

0
76

சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவிக்கின்றார்.

ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அண்மையில் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த் ஆனாலும் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நான்கு பேருக்கு கொரோனா உறுதியானது.

ரஜினிகாந்துக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தபோதிலும், சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக, மூன்று தினங்கள் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சென்னை போயஸ் வீட்டிற்கு திரும்பினார். இந்த நிலையில்தான் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்து தன்னை நம்பி அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த். இது குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சென்னையில் இன்று இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் உரையாற்றிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் வைத்து ரஜினிகாந்த் இந்த முடிவை அறிவித்து இருப்பதால் அது தொடர்பாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அவர் நீண்ட ஆயுளோடு தன்னுடைய திரைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எதிர்காலத்தில் ரஜினிகாந்த் அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுத்தால் அந்த ஆதரவு அதிமுக பக்கம் தான் இருக்கும் திமுகவிற்கு ஆதரவு கொடுக்க மாட்டார் என்று தெரிவித்திருக்கின்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு ரஜினிகாந்த் அவர்களின் முடிவு என்பது அவருடைய தனிப்பட்ட உரிமையை சார்ந்தது. அவருடைய முடிவு தேர்தல் களத்தில் எந்த ஒரு பாதிப்பையும் அல்லது தாக்கத்தை ஏற்படுத்திவிடாது. ரஜினிகாந்த் தேர்தல் நேரத்தில் அதிமுகவிற்கு ஆதரவு கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்திருக்கின்றார்.