ரஜினி தான் ஹீரோ நீங்களில்லை.. லேடி சூப்பர் ஸ்டாரை ரைட் லெப்ட் வாங்கிய இயக்குனர்!! வெளியான பரபர தகவல்!!

Photo of author

By Rupa

Rajinikanth: ரஜினியின் மன்னன் படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

1992 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான மன்னன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படம் பின்னணி குறித்த சுவாரசிய தகவலும் ஒன்று உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஜயசாந்தி, அன்றைய காலத்தில் தெலுங்கின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர். அப்படி இருக்கும் பொழுது தமிழ் சூப்பர் ஸ்டாருடன் படம் பண்ணுவது என்பது அடுத்த கட்ட பெருமை.

அதனால் இவர் எப்பொழுதும் கர்வம் நிறைந்த திமிருடனி நடந்து கொள்வாராம். இப்படி இருக்கும் பொழுது இயக்குனர் வாசு எப்பொழுதும் விரைப்பாக உள்ள மனிதர். இவரிடம் சென்று இம்மாதிரியான திமிரு காட்டினால் சுத்தமாக பிடிக்காது. அதனால் இயக்குனர் வாசு விஜயசாந்தியிடம் நேரடியாக சென்று நீங்கள் ஒன்றும் படத்தின் ஹீரோ இல்லை, படத்தின் ஹீரோ ரஜினி தான் என கூறியுள்ளார்.

மன்னன் படம் முடிவதற்குள் இது போன்ற பல கருத்து வேறுபாடுகள் இருவருக்குமிடையே நடந்துள்ளது. ஆனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததும் இருவரும் வெள்ளைக்கொடி காண்பித்து சமாதானம் ஆகி உள்ளனர். இதனால் படத்தின் வெற்றியை சேர்ந்த கொண்டாடியதாக வாசுவின் உடனிருந்த உதவி இயக்குனர் தற்பொழுது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.