பாலச்சந்தரிடம் திமிராக கேள்வி கேட்ட ரஜினிகாந்த்!! சட்டென பதில் சொன்ன இயக்குனர்!!

Photo of author

By Gayathri

சிவாஜி ராவ் என்கின்ற ரஜினிகாந்த் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நடிப்பின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் வந்து சேர்ந்தார்.

 

இவர் தமிழகத்தில் இருந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் நடைபெற்ற நடிப்புப் பயிற்சி பள்ளியில் நடிப்பைக் கற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருடைய நடிப்பு பயிற்சியானது முடிவடையும் காலகட்டத்தில் அந்த பள்ளிக்கு இரண்டு மிகப்பெரிய இயக்குனர்கள் வருகை தந்துள்ளனர். அதில் ஒருவர் தான் இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் இன்னொருவர் முரளியின் தந்தை சித்தலிங்கய்யா ஆவார்.

 

சிவாஜி ராவ் அவர்களுக்கு பாலச்சந்தர் என்றால் மிகவும் விருப்பம். அவரை ஒருமுறையாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என்று ஆசை இருந்த நிலையில், இவர்களுடைய பள்ளிக்கு அவர் வருகிறார் என்றவுடன் எப்படியாவது அவரை கவர்ந்து விட வேண்டும் என முடிவு செய்து இருக்கிறார் ரஜினிகாந்த் அவர்கள்.

 

அச்சமயத்தில், இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் ஒவ்வொரு மாணவரிடமும் கேள்விகளை கேட்டு வந்துள்ளார். மாணவர்களும் இயக்குனரிடம் தங்கள் மனதில் உள்ள கேள்விகளை கேட்க அவர் அதற்கு பதில் அளித்துள்ளார். இவ்வாறாக, சிவாஜிராவைப் பார்த்து உங்கள் பெயர் என்ன என்று கேட்கிறார்.

 

அதற்கு சிவாஜி ராவ் என கம்பீரமாக சொல்கிறார். உடனே சிவாஜி ராவ் பாலசந்தரிடம் கேள்வி கேட்கிறார். What to you expect from actor apart from acting? என்று. அதற்கு சிரித்துக் கொண்டே பாலசந்தர் ‘பாடம்’ என்று பதில் சொல்கிறார். முகத்தைத் துடைத்த படி ரஜினி மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறார்.

 

இப்பொழுது இயக்குனர் அவர்கள் அந்தக் கேள்விக்கு மட்டுமல்லாமல் சிவாஜிராவுக்கும் சேர்த்து பதில் சொன்னார். The actor should not act outside  என்று பதில் அளித்துள்ளார். அந்த சமயத்தில் பத்திரிகை பேட்டி ஒன்றில் சிவாஜி ராவ் குறிப்பிடும்போது அந்த சமயத்தில் நான் கொஞ்சம் திமிராகத் தான் நடந்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

 

மேலும், அது எனக்கே புரிந்தது. என்னுடைய பேச்சில் கொஞ்சம் நடிப்பும் இருந்தது. ஆனால் அன்று முதல் வெளியில் நான் நடிப்பதே இல்லை என்றாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

 

அந்த சந்திப்பு முடிந்ததும் ரஜினியைப் பார்த்து கைநீட்டினார் பாலசந்தர். அது கைகொடுக்க மட்டுமல்ல. திரையுலகில் கைதூக்கி விடவும்தான் என்ற தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.