ரஜினிகாந்தே எனக்கு ஒரு ஆள் கிடையாது! உங்க அண்ணன் என்ன பெரிய கொம்பனா? மீண்டும் விஜய்யை சீண்டிய வேல்முருகன்!

0
8
Rajinikanth is not a man for me! What big horn is your brother? Velmurugan scolded Vijay again!
Rajinikanth is not a man for me! What big horn is your brother? Velmurugan scolded Vijay again!

திமுக இப்போ ஒரு யுக்தியை அரசியல் களத்தில் எடுத்துள்ளது. அதாவது திமுக கட்சியை சேர்ந்தவர்கள் நேரடியாக விஜய்யை விமர்சனம் செய்தால் விஜய் பெரிய ஆள் ஆகிடுவார். அதனால் தங்களின் கூட்டணி கட்சி தலைவர்களை வைத்து விஜய்யை விமர்சனம் செய்கிறார்கள். ஏற்கனவே திருமா மற்றும் வேல்முருகன் விஜய் பற்றி தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

அண்மையில் விஜய்யை பற்றியும், விஜய்யிடம் விருது வாங்கும் பெண் குழந்தைகள் பற்றியும் மிகவும் அருவருக்கத்தக்க விதமாக வேல்முருகன் பேசி இருந்தார். தற்போது மீண்டும் விஜய் பற்றி சர்ச்சையாக பேசியுள்ளார் வேல்முருகன்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். அதாவது பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து வந்து தமிழக வாழ்வுரிமை கட்சியை வேல்முருகன் ஆரம்பித்தார். என்ன எப்போ பாத்தாலும் எங்க அண்ணா, எங்க நொண்ணான்னு சொல்லிகிட்டே இருக்கீங்க. இந்த நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையே நான் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும்போது இளைய தலைமுறையை சிகரெட் பிடிக்க வைத்து அடிமையாக்குகிறார் என்று கேள்வி கேட்டவன் நான். உங்க அண்ணன் விஜய் என்ன ரஜினியை விட பெரிய கொம்பனா என்று பேசியுள்ளார். இந்த பேச்சு அரசியல் களத்தில் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

Previous articleஅஜித்துக்காக இதை விஜய் தினமும் செய்தார்.. இது தான் அவர்களின் உறவு – சோபனா ஓபன் டாக்!!
Next articleகமலுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!! குண்டர்கள் வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது!!