தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: ரஜினிகாந்த் கோரிக்கை மனு

0
168

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: ரஜினிகாந்த் கோரிக்கை மனு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் கமிஷன், ரஜினிகாந்தை நேரில் அழைத்து விசாரணை செய்ய சமீபத்தில் சம்மன் அனுப்பியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு ஒன்று கமிஷனிடம் அளிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கேட்க வேண்டிய கேள்விகளை எழுத்துப்பூர்வமாக தன்னிடம் கேட்டால் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயார் என்று ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து விரைவில் விசாரணை கமிஷன் முடிவெடுக்கும் என தெரிகிறது.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சமூக விரோதிகளால் ஏற்பட்டது என்று கூறினார்.

சமூக விரோதிகள் என்று யாரை ரஜினிகாந்த் குறிப்பிட்டார் என்பதை அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என சீமான் உள்ளிட்டோர் எழுப்பிய கோரிக்கைகளை அடுத்தே விசாரணை கமிஷன் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Previous article’இந்தியன் 2’ விபத்து குறித்து சிம்புவின் சாட்டையடி அறிக்கை!
Next articleஎழுப்பிய சுவருக்கு பதிலாக வீட்டையே கட்டியிருக்கலாம்! ஆலோசனை கொடுத்த சீமான்!!