அவமானப்படுத்திய தயாரிப்பாளர், 2 வருடங்களுக்குள் முடித்த சவால்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

Photo of author

By CineDesk

அவமானப்படுத்திய தயாரிப்பாளர், 2 வருடங்களுக்குள் முடித்த சவால்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

CineDesk

அவமானப்படுத்திய தயாரிப்பாளர், 2 வருடங்களுக்குள் முடித்த சவால்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

கோலிவுட் திரையுலகில் தான் நடிக்க வந்த புதிதில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், அந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு இரண்டே வருடங்களில் தான் அவர் முன் கம்பீரமாக நின்றதாகவும் ரஜினிகாந்த் நேற்றைய தர்பார் ஆடியோ விழாவில் பேசினார்.

பாரதிராஜா உருவாக்கிய 16 வயதினிலே படம்தான் தன்னை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது என்றும், அந்த படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு தயாரிப்பாளர் தனக்கு வாய்ப்பு கொடுப்பதாக அழைத்துச் சென்று ஏமாற்றி விட்டதாகவும், அது மட்டுமன்றி தன்னை அவமானப்படுத்தி வெளியே போ என்று சொல்லி விட்டதாகவும் கூறினார்.

அந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு ’இதே இடத்தில்தான் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் ஆகி காட்டுகிறேன் என்று சவால் விட்டதாகவும், அதன்படி இரண்டே வருடங்களில் தான் பெரிய நடிகராகி அதே தயாரிப்பாளர் முன் கம்பீரமாக நின்றதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இருப்பினும் தன்னுடைய வெற்றிக்கு தன்னுடைய உழைப்பு, அதிர்ஷ்டம் மட்டும் காரணம் இல்லை என்றும், தனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் , தனக்கு அமைந்த கேரக்டர்கள், தன்னுடைய படம் ரிலீஸான நேரம் ஆகியவை தான் காரணம் என்பதை தான் உணர்ந்து அதன் பின் கர்வம் இன்றி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.