#Rajinikanth: கால் முறிவு ஏற்பட்டும் ரஜினியுடன் ரொமான்ஸ் செய்த ஸ்ரீ தேவி!! வெளியான அன்டோல்டு ஸ்டோரி!!

Photo of author

By Rupa

#Rajinikanth: காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்ட பின்னர் வலியை தாங்கிக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்காக ரொமான்டிக் பாடல் ஒன்றில் நடிகை ஸ்ரீதேவி அவர்கள் நடித்து கொடுத்துள்ளார். இந்த தகவல் இன்று வரை யாரும் அறிந்திடாத தகவல் ஆகும்.
தமிழில் வெளியான கந்தன் கருணை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி அவர்கள் தன்னுடைய 13வது வயதில் மூன்று முடிச்சு திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தை இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்கள் இயக்கியிருந்தார். தொடர்ந்து தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து நடிகை ஸ்ரீதேவி அவர்கள் வெற்றி பெற்றார்.
ஹிந்தி சினிமாவில் தற்பொழுது டாமினேசன் அளவு குறைந்துள்ளது. ஆனால் நடிகை ஸ்ரீதேவி அவர்கள் ஹிந்தி சினிமாவில் நுழையும் பொழுது டாமினேஷன் அதிகமாக இருந்தது. ஆனால் அதையும் தாண்டி நடிகை ஸ்ரீதேவி அவர்கள் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
நடிகை ஸ்ரீதேவி அவர்கள் தமிழக அரசு வழங்கும் அரசு விருது, ஆந்திர அரசு வழங்கும் சிறந்த நடிகைக்கான விருது, கேரள அரசு வழங்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது ஆகிய மாநில விருதுகளை பெற்றுள்ளார். அது மட்டுமில்லாமல் நான்கு ஃபிலிம் பேர் விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
இவர் சினிமாவில் அளித்த சிறந்த பங்களிப்பிற்காக 2013ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. நடிகை ஸ்ரீதேவி அவர்கள் ஹிந்தி, தமிழ் உள்பட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி அவர்கள் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த பிறகு சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் சில வருடங்கள் கழிந்து நடிகை ஸ்ரீதேவி அவர்கள் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெற்றியடைய பின்னர். நடிகர் விஜய் நடித்த புலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு இருக்க உடைந்த காலூடன் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படத்தில் ரொமான்டிக் பாடல் ஒன்றுக்கு நடனமாடியது பலரும் அறியப்படாத தகவல் தான்.
அதாவது இயக்குநர் ஆர்.சி சக்தி அவர்கள் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்மயுத்தம் திரைப்படம் 1979ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகையாக ஸ்ரீதேவி அவர்களும் தேங்காய் சீனிவாசன் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடித்திருந்தார். தர்ம யுத்தம் திரைப்படத்தில் தான் நடிகை ஸ்ரீதேவி அவர்கள் எலும்பு முறிவு ஏற்பட்ட காலுடன் வலியை தாங்கிக் கொண்டு ரொமான்டிக் பாடல் ஒன்றில் நடித்து கொடுத்துள்ளார்.
தர்மயுத்தம் திரைப்படத்தின் ஒரு. காட்சியில் நடிகர். ரஜினிகாந்த் அவர்களை நடிகை ஸ்ரீதேவி அவர்கள் சுவர் ஒன்றை ஏறி குதித்து பார்க்க வருவது போல ஒரு காட்சி இருக்கும். இந்த காட்சி பிடிக்கப்படும் பொழுது நடிகை ஸ்ரீதேவி அவர்கள் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து 80 சதவீதம் தர்மயுத்தம் திரைப்படம் படமாக்கப்பட்டது. ஒரு ரொமான்டிக் பாடல் ஒன்றும் சில காட்சிகளும் படமாக்க வேண்டிய சூழல் இருந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை ஒரு வாரம் தள்ளி வைக்கலாம் என்று படக்குழு திட்டமிட்டதாம். ஆனால் இதில் நடிகை ஸ்ரீதேவி அவர்களின் கால்ஷீட் பிரச்சனை தயாரிப்பாளர் நஷ்டம் ஆகிய பிரச்சனைகள் இருந்தது.
இதையடுத்து நடிகை ஸ்ரீதேவி அவர்கள் மீதமுள்ள அந்த ஒரு ரொமான்டிக் பாடலை கீழே அமர்ந்தபடியே அந்த பாடலில் நடித்துள்ளார். அந்த பாடல் ஆகாய கங்கை என்ற பாடல் தான். அந்த பாடலில் முழுவதுமாக பார்த்தால் நடிகை ஸ்ரீதேவி அவர்கள் கீழே அமர்ந்தபடியே தான் இருப்பார். நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் உதவியுடன் ஒரு சில இடங்களில் எழுந்து நிற்பார். இவ்வாறு மூன்று நாட்கள் வலியை தாங்கிக் கொண்டு பாடலையும் மீதமுள்ள காட்சிகளையும் நடித்து முடித்து கொடுத்துள்ளார்.