ரஜினிகாந்த் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறா? பரபரப்பு தகவல்

Photo of author

By CineDesk

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் கலந்துகொண்டதிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பதும் இதுகுறித்து போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து ரஜினிகாந்த் விமானம் மூலம் மைசூருக்கு சென்றுள்ளார். அவர் சென்ற விமானம் நடுவானில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இருப்பினும் ரஜினிகாந்த் உள்பட அந்த விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் அனைவரும் பத்திரமாக உள்ளார்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரஜினிகாந்த் சென்ற விமானம் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியால் ரஜினி ரசிகர்கள் பலர் பதட்டம் அடைந்தனர். இருப்பினும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற செய்தி அனைவரையும் நிம்மதி அடையச் செய்துள்ளது