ரஜினியின் இரண்டு படங்களுக்கு அனிருத் கேட்ட சம்பளம்… ஷாக் ஆன லைகா!

0
198

ரஜினியின் இரண்டு படங்களுக்கு அனிருத் கேட்ட சம்பளம்… ஷாக் ஆன லைகா!

அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் பெரும்பாலானவர்களின் படங்களுக்கு இசையமைத்து வருபவர் அனிருத். அதுபோல இந்த ஆண்டு வெற்றி பெற்ற படங்களில் பெரும்பாலான படங்களுக்கு அனிருத்தான் இசை.

அதனால் முன்னணி நடிகர்களும் இயக்குனர்களும் அவரை தங்கள் படங்களில் பயன்படுத்த ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்தை வைத்து லைகா அடுத்து தயாரிக்கும் படங்களுக்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்ய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் விரும்பியுள்ளது.

இதற்காக அனிருத் கேட்ட சம்பளம்தான் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இரண்டு படங்களுக்கும் சேர்த்து 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம். ஏ ஆர் ரஹ்மான் கூட இன்னும் அந்த அளவுக்கு சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அப்படி அந்த சம்பளத்தை லைகா அவருக்கு கொடுத்தால் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெற்ற இசையமைப்பாளர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, அஜித் 62, தளபதி 67 ஆகிய பெரிய பட்ஜெட் படங்களுக்கு அனிருத்தான் இசையமைத்து வருகிறார்.

Previous articleஆட்டத்தைக் கெடுத்த மழை… டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தான் வெற்றி!
Next articleபைனல் செய்யப்பட்ட இந்தியன் 2 படத்தின் புதிய பட்ஜெட் இதுதான்!