ஒரே வருடத்தில் 21 படங்களில் நடித்து சாதனைப் படைத்த ரஜினிகாந்த் – எந்தெந்த படங்கள்ன்னு தெரியுமா?

Photo of author

By Gayathri

ஒரே வருடத்தில் 21 படங்களில் நடித்து சாதனைப் படைத்த ரஜினிகாந்த் – எந்தெந்த படங்கள்ன்னு தெரியுமா?

Gayathri

ஒரே வருடத்தில் 21 படங்களில் நடித்து சாதனைப் படைத்த ரஜினிகாந்த் – எந்தெந்த படங்கள்ன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி உட்பட பல படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவருடன் நடிக்க பல முன்னணி நடிகைகள் போட்டாபோட்டிக்கொண்டு நடிப்பார்கள்.  தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்த நடிகராகவே ரஜினி வலம் வருகிறார்.

சமீபத்தில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெய்லர் படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் நல்ல லாபம் கிடைத்தது.

1978ம் ஆண்டு ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்து சாதனை படைத்தாராம் ரஜினி. தமிழ் உட்பட தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிப் படங்களையும் சேர்த்தே 21 படங்களில் நடித்தாராம்.

மாங்குடி  மைனர், சங்கர் சலீம் சைமன், பைரவி, சதுரங்கம், என் கேள்விக்கு என்ன பதில், இளமை ஊஞ்சலாடுகிறது, ஆயிரம் ஜென்மங்கள், பாவத்தின் சம்பளம், ஜஸ்டிஸ் கோபிநாத், பிரியா, அவள் அப்படித்தான்,வணக்கத்துக்குரிய காதலியே, இறைவன் கொடுத்த வரம், தப்பு தாளங்கள்,தாய் மீது சத்தியம், முள்ளும் மலரும் போன்ற 15 தமிழ் திரைப்படங்களும், கன்னடத்தில் நான்கு மற்றும்தெலுங்கில் இரண்டு திரைப்படங்கள் என மொத்தம் 21 திரைப்படங்களில் நடித்து அசத்தினாராம் ரஜினி. இதுவரை இவருடைய சாதனையை எந்த நடிகராலும் முறியடித்ததே இல்லையாம்.