ரஜினியின் 170 வது படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரையான இயக்குனர் கையில்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!  

Photo of author

By Parthipan K

ரஜினியின் 170 வது படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரையான இயக்குனர் கையில்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!  

Parthipan K

Rajinikanth's 170th film is in the hands of the Oscar-nominated director.. Fans in celebration!!
ரஜினியின் 170 வது படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரையான இயக்குனர் கையில்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களாக இந்திய சினிமாவில் கொடி கட்டி பறக்கும் ஒரே நடிகர்.
தன்னுடைய 72 வது வயதிலும்  சுறுசுறுப்பாக படங்கள் நடித்து மக்கள் மத்தியில் ஒரே சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்றவர்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படம் 70 % சதவீதம் நிறைவு பெற்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
ஜெயிலர் படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளன. பல மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர்  யார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது லைக்கா Lyca நிறுவனம் ரஜினியின் அடுத்த இயக்குனரை அறிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘தலைவர் 170   ‘ படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார்.
ஜெய் பீம் படம் மூலம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் (தலைவர் 170) படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், லைக்கா Lyca நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
இச்செய்தியை கேட்ட ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியும், ஆர்வத்துடன் இருக்கிறார்கள்