எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் ரஜினியின் பிறந்தநாள் பரிசு!! 

0
157
Rajini's birthday gift to be released with high expectations!!
Rajini's birthday gift to be released with high expectations!!

ரஜினியின் பிறந்தநாள் பரிசாக அப்டேட் ஒன்றினை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 2023 -ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் இவர்களுடன் வசந்த் ரவி, யோகி பாபு,விநாயகன்,போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் உலகெங்கும் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து  பிளாக்பஸ்டர் திரைப்படமாக கொண்டாடப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதனுடைய இரண்டாவது பாகத்தை இயக்க நெல்சன் திட்டமிட்டுள்ளார். இதற்கான தகவல்கள் கசிந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எக்கச்சக்கமாக எகிற விட்ட நிலையில் ஏற்கனவே வெளியான தகவல்களின்படி ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு ‘ஹுக்கும்’ என தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இதற்கான கதை மற்றும் திரைக்கதை எழுதும் பணியில் நெல்சன் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ வீடியோவிற்கான படப்பிடிப்பு பணிகள் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவினை ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் மாதம் 12ஆம் தேதியில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் பரிசளிக்க பட குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க உள்ள மற்ற நடிகர்களின் அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியோ ஜெயிலர் 2 திரைப்படமும் ரஜினிகாந்த் திரைப்பட பயணத்தில் மைல்கல்லாக அமையும் என்பதில் ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

Previous articleதுண்டுடன் இருந்த ரஜினி.. தனது வேட்டியை கொடுத்த விஜயகாந்த்..
Next articleயாருடைய கட்சியிலும் இணையாமல் தனக்கென தனி கட்சியினை நிறுவிய நடிகர் மற்றும் அரசியல் தலைவர்கள்!!